நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி செப்டம்பர் 27 முதல் ஒக்டோபர் 06 வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் பத்து நாட்கள் நடைபெறும்.
40 வெளிநாட்டு விற்பனை கூடங்கள் உட்பட 500 இற்கும் மேற்பட்ட கண்காட்சி கூடங்களைக் கொண்ட இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும்.முத்திரைப் பணியகமும், தாபல் திணைக்களமும் இணைந்து, சர்வதேச புத்தகக் கண்காட்சிக்காக உருவாக்கிய முதல் நாள் அட்டையும் வெளியிடப்பட்டது.
மேலும் இலங்கை பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு "தரு திரிய" புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் குலதுங்க, செயலாளர் லசித உமகலிய, பொருளாளர் ஆரியதாச வீரமன், உபதலைவர்கள் கபில விக்ரமசிங்க, சமீர ரத்நாயக்க, உபசெயலாளர் தீபால் மொராயஸ், பொருளாளர் சார்மின் விஜேரத்ன, தாபல் திணைக்களத்தின் பிரதி தபால் மா அதிபர் (செயல்பாடுகள்), சட்டத்தரணி பிரேமச்சந்திர ஹேரத், இலங்கை முத்திரைப் பணியகத்தின் பணிப்பாளர் லங்கா டி சில்வா ஆகியோர் உட்பட இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment