Ads (728x90)

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சனிக்கிழமை முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார் 

அங்கு இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமதா (Akio ISOMATA), ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதியை வரவேற்றனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செப்டெம்பர் 27 முதல் 30 வரை ஜப்பானில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

செப்டெம்பர் 27 ஆம் திகதி ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறவுள்ள "எக்ஸ்போ 2025" இலங்கை தின நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget