ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச்சபை அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களை நியூயோர்க்கில் சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்தல், செயற்திறனான அரச சேவையை ஏற்படுத்துதல் மற்றும் மோசடி மற்றும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருதல், போதைப்பொருட்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் மற்றும் ஒரு வருட குறுகிய காலத்தில் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் தற்போதைய அரசாங்கம் ஒரு தீர்க்கமான திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து துறைகளிலும் இந்த சாதனைகள் முன்னோக்கி கொண்டு செல்லப்படுமே தவிர எக்காரணம் கொண்டும் திருப்பியமைக்கப்படாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நாடு எதிர்கொள்ளும் அடுத்த சவால், அடைந்த பொருளாதார வெற்றிகள் நாட்டு மக்களைச் செல்வதை உறுதி செய்வதாகும் என்றும், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் அந்த நோக்கத்தை மனதில் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்றும் ஜனாதிபதி கூறினார்."வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பெரும் ஆதரவை வழங்கினர். அவர்கள் நிதி உதவி செய்தனர். அந்த பங்களிப்பு வெற்றிக்கு வழிவகுத்தது.
2019 தேர்தலில் சுமார் 3% வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி நாங்கள். ஆனால் 2024 ஜனாதிபதித் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து நடந்த பொதுத்தேர்தலிலும், இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற ஆசனங்களை வென்று வெற்றி பெற முடிந்தது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி அப்போதைய இலங்கை, கடன்களை செலுத்த முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து எமது நாடு வங்குரோத்து நாடாக மாறியது. இன்று அந்த நெருக்கடியை விரைவாக தீர்த்து வைத்த நாடாக மாறியுள்ளது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.எங்களுக்கு இருந்த சவால்களில் ஒன்று பொருளாதார நெருக்கடியைத் தணிப்பது. மற்றொன்று இலங்கையில் மீண்டும் ஒருபோதும் இதுபோன்ற நெருக்கடி ஏற்படாத வகையில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவது. பொருளாதார நெருக்கடியில் மூழ்கியிருந்த நாட்டை நாம் தற்போது படிப்படியாக மீட்டு வருகிறோம்.
அனைத்து சர்வதேச அமைப்புகளும், மதிப்பீட்டு நிறுவனங்களும், சர்வதேச நிதி நிறுவனங்களும், இலங்கை ஒரு நெருக்கடியின் போது விரைவாக தன்னை நிலைப்படுத்திக் கொண்ட ஒரு நாடாக இருந்ததாக அறிக்கைகளை வழங்கியுள்ளன என்றார்.



Post a Comment