இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது.
ப்றூக் ஹாலிடே 69 ஓட்டங்களையும், சொபி டிவைன் 63 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 112 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
பந்துவீச்சில் ரபியா கான் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 39.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது.
பாஹிமா காத்துன் 34 ஓட்டங்களையும், நஹிடா அக்தர் 17 ஓட்டங்களையும், ரபியா கான் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜெஸ் கேர் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், லி தஹுஹு 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Post a Comment