Ads (728x90)

லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக அவர் அயராது உழைத்ததற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் அவர் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுகிறார் என்று நேற்று நோர்வே நோபல் குழு தெரிவித்துள்ளது.

வளர்ந்து வரும் இருளில் ஜனநாயகத்தின் சுடரை அணையாமல் காத்து வரும் தைரியமான மற்றும் அர்ப்பணிப்புள்ள அமைதியின் போராளி என்று நோபல் குழு மச்சாடோவைப் பாராட்டியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget