Ads (728x90)

மாகாண சபைகள் மற்றும் நகர சபை, பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி சபை நிறுவனங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் கடந்த காலங்களில் காணாமற் போயுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். 

இவ்வாறு காணாமற் போன வாகனங்கள் தொடர்பிலான தகவல்களை அறிந்து கொள்வதற்கு முடியாதுள்ளதாகவும், சில வாகனங்கள் உதிரிப்பாகங்களாக கழற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார். 

மேற்படி வாகனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சு மட்டத்தில் இரகசிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டில் எங்காவது இத்தகைய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அவற்றை அமைச்சிடம் ஒப்படைக்குமாறு பொது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகனங்களை ஒப்படைக்காமல் தம் வசம் வைத்துள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவ்வாறு அவர்களை கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget