Ads (728x90)

2025 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகளான ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சர்க்யூட்களில் மைக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் டனல் மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச்.டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் இன்று ஸ்டாக்ஹோமில் அறிவித்தது.

நூற்றாண்டு பழமையான குவாண்டம் இயக்கவியல் தொடர்ந்து புதிய ஆச்சரியங்களை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குவாண்டம் மெக்கானிக்ஸ் அனைத்து டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கும் அடித்தளமாக இருப்பதால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நோபல் பரிசு குழுவின் தலைவர் ஓலே எரிக்சன் கருத்து தெரிவித்தார்.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget