இது தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு துறையால் நடத்தப்பட்டு சட்ட மாஅதிருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான சதொச லிமிடெட் நிறுவனத்தின் கணக்காய்வாளர் பொது அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறன், பரிசீலனையை நோக்கி நடைபெற்ற குழு கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது.
இக்கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்காக 27,011,980,142 ரூபா செலவிடப்பட்டிருந்த போதிலும், அதன் விற்பனையிலிருந்து 11,854,949,124 ரூபா மட்டுமே வருமானமாக கிடைத்தது. இதன் மூலம் சுமார் 15 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, உள்ளூர் அரிசி சந்தை நிலை, நெல் அறுவடை அளவு மற்றும் களஞ்சிய வசதிகள் போன்றவை சரிவர ஆய்வு செய்யப்படாமலே சட்டபூர்வமான கொள்முதல் நடைமுறைகளை மீறி அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கோப் குழு குறிப்பிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தியதா எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது, தொடர்புடைய அதிகாரிகள் குறித்த வழக்கு குற்றப் புலனாய்வு துறையால் விசாரிக்கப்பட்டு தற்போது சட்ட மாஅதிபர் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர்.

Post a Comment