பின்னர் 1907ஆம் ஆண்டு இவ்வைத்தியசாலைக்கு "யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலை" என்ற புதிய பெயர் வழங்கப்பட்டு அதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன.
1956ஆம் ஆண்டு இது "யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை" என பெயர் மாற்றப்பட்டது.
1980 இல் இவ்வைத்தியசாலை "யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை" என பெயர் மாற்றம் பெற்றது.
இந்தநிலையில் விரைவில் "தேசிய வைத்தியசாலை" என்ற அடிப்படையில் இந்த வைத்தியசாலை உயர்த்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் 175 ஆண்டு சேவையை நினைவு கூர்ந்து, பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் இவ்வைத்தியசாலையில் நடைபெற உள்ளன. அதன் முதல் கட்டமாக, விசேட தபால் தலை ஒன்று இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.
அஞ்சல் திணைக்களத்தின் உதவி அஞ்சல் அத்தியட்சகர் நாயகம், வட மாகாண உதவி அஞ்சல் அத்தியட்சகர் நாயகம் மற்றும் அஞ்சல் துணைக் கிளை உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த விசேட தபால் தலையை வெளியிட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், தாதிகள் மற்றும் பிற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Post a Comment