Ads (728x90)

நாடு முழுவதும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் 4,630 வெற்றிடங்களும், தென் மாகாணத்தில் 2,513 வெற்றிடங்களும், மத்திய மாகாணத்தில் 6,318 வெற்றிடங்களும், வடமேல் மாகாணத்தில் 2,990 வெற்றிடங்களும், ஊவா மாகாணத்தில் 2,780 வெற்றிடங்களும், வடமத்திய மாகாணத்தில் 1,568 வெற்றிடங்களும், கிழக்கு மாகாணத்தில் 6,613 வெற்றிடங்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 3,994 வெற்றிடங்களும் மற்றும் வடக்கு மாகாணத்தில் 3,271 ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். 

தேசிய பாடசாலைகளில் 1,501 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாகவும் தெரிவித்த பிரதமர், இதற்காக நாடு முழுவதும் உள்ள தேசியப் பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் பாடங்கள், வெளிநாட்டு மொழிகள் மற்றும் 13 ஆண்டு தொடர்ச்சியான பாடங்களுடன், க.பொ.த உயர்தர சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மூல வெற்றிடங்களுக்காக 28.07.2024 முதல் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றது. 

ஆசிரியர் சேவையின் தரம் 3 (ஆ) 1 தரத்தை சேர்ந்த பொறுப்பேற்காத 353 பட்டதாரிகளை அடுத்த 2 மாதங்களுக்குள் ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆசிரியர் சேவையில் தற்போதுள்ள வெற்றிடங்களை நிரப்ப பிரதமரின் செயலாளரின் தலைமையில் நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு மறுஆய்வுக் குழுவிடம் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அந்த வெற்றிடங்களை விரைவில் நிரப்ப தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget