71 வயதான க்ராஸ்னஹோர்கை, “அழிவின் நிழலில் கூட கலைக்கான சக்தியை வலியுறுத்தும் பார்வையுள்ள எழுத்துக்களுக்காக” கௌரவிக்கப்பட்டார் என நோபல் குழு தெரிவித்துள்ளது.
அவரது நாவல்கள், குறுநாவல்கள் மற்றும் கட்டுரைகள் பெரும்பாலும் ஜெர்மனி மற்றும் ஹங்கேரி நாடுகளில் பிரபலமானவை. “அவர் ஒரு மயக்கும் எழுத்தாளர். க்ராஸ்னஹோர்கையின் எழுத்து பாணி மிகவும் கடினமானதும் ஆழமானதுமானது.
அவர் ஒருமுறை தனது பாணியை “பைத்தியத்தின் எல்லை வரை நிஜத்தை ஆராய்வது” என்று விவரித்தார். நீண்ட வாக்கியங்கள் மற்றும் குறைந்த பந்திகள் அவரின் எழுத்தின் அடையாளங்களாகும்.
அவரது முக்கிய படைப்புகளில் “சாத்தான்டாங்கோ (Satantango)” மற்றும் “தி மெலன்கலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ் (The Melancholy of Resistance)” ஆகியவை ஹங்கேரிய இயக்குனர் பெலா டார் (Béla Tarr) இயக்கத்தில் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

Post a Comment