Ads (728x90)

2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தநிலையில் 179 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 46.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

குறித்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget