Ads (728x90)

எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி முதல், டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில் பயணிகள் டெபிட் (Debit) மற்றும் கிரெடிட் (Credit) அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களைச் செலுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

அத்துடன் தனியார் பேருந்து உரிமையாளர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது இலங்கையின் பொதுப் போக்குவரத்து கட்டண முறையை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

இந்த புதிய கட்டண முறை ஆரம்பத்தில் டிக்கெட் இயந்திரங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன் பின்னர் படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget