Ads (728x90)

இந்தூர், ஹொல்கார் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்யில் இந்தியாவை 4 ஓட்டங்களால் வெற்றிகொண்டது. 

இதன் மூலம் இங்கிலாந்து அரை இறுதியில் விளையாடும் தகுதியை பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளைத் தொடர்ந்து மூன்றாவது அணியாக அரை இறுதி வாய்ப்பை இங்கிலாந்து பெற்றுக்கொண்டது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

289 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 284 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.


Post a Comment

Recent News

Recent Posts Widget