Ads (728x90)

புதிய கல்விச் சீர்திருத்தங்களிற்கான தரம் 01 மற்றும் தரம் 06 இற்கான பாடத்திட்டம், ஆசிரியர் வழிகாட்டி கையேடுகள் மற்றும் கால அட்டவணைகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். 

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் இதுவரை எந்தவொரு தரத்திற்கும் உத்தியோகபூர்வமாக பாடத்திட்டங்கள், ஆசிரியர் வழிகாட்டி கையேடுகள் அல்லது கால அட்டவணைகள் வெளியிடப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான 01 மற்றும் 06 ஆம் தரங்கள் தொடர்பான மாதிரி அலகுகள் (மொடியுலர்) மற்றும் ஆசிரியர் வழிகாட்டல்கள் எனக் கூறும் பல பதிவுகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இவை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டவை அல்ல என்றும் அவர் தெரிவித்தார். 


 

Post a Comment

Recent News

Recent Posts Widget