போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 129 ஓட்டங்களை பெற்றது. வங்காளதேச அணியின் சிறப்பான பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதையடுத்து 130 ஓட்டங்களை வெற்றி இலக்குடன் வங்காளதேச அணி துடுப்பெடுத்து ஆடியது.பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருப்யா ஹைதர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.
இறுதியில் வங்காளதேச அணி 31.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதன் மூலம் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Post a Comment