Ads (728x90)

ஒரு மரக்கன்றை நடுவதென்பது வெறுமனே ஒரு குறியீட்டுச் செயல் மாத்திரமல்ல. அதனைப் பாதுகாத்து நன்றாகப் பராமரிக்க வேண்டும்.  எதிர்காலச் சந்ததியினருக்காக அந்த மரக்கன்றுகளைப் பாதுகாப்பது இன்றைய தலைமுறையின் பொறுப்பாகும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Clean Sri Lanka திட்டத்தின் கீழ், இலங்கை ஹதபிம அதிகார சபை சுற்றுச்சூழலை நேசிக்கும் உணர்ச்சி மிக்க தலைமுறையை உருவாக்கும் நோக்கத்தில் முன்னெடுக்கும் "சோபா சிப்வதுல" செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று இரத்மலானை இந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

"சோபா சிப்வதுல" செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைக் கூறினார்.

மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமர் தனது கைகளால் பாடசாலை வளாகத்தில் 'நா' (Ironwood) மரக்கன்றை நாட்டி வைத்தார். அதற்குச் சமாந்தரமாக பாடசாலை மாணவர்களும் அவ்வேளை 100 கன்றுகளை நாட்டி வைத்தனர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுணாரச்சி, சமன்மாலீ குணசிங்க, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, ஜனாதிபதி அலுவலகத்தின் மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, இலங்கை ஹதபிம அதிகாரச் சபையின் தலைவர். ஆர்.டி. சிறிபால, கெபிடல் மஹாராஜா குழுமத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி எஸ்.வி. வீரசேகர, இரத்மலானை இந்து கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பாடசாலைகளில் பசுமை வலயங்களை உருவாக்கும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைவாக, எஞ்சிய 8 மாகாணங்களிலும் மாகாண ஆளுநர்களின் தலைமையில் ஒரே நேரத்தில் மரக்கன்றுகளை நடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget