அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவரான நிஷாந்த சமரவீர சதொசவில் 8 சிரேஷ்ட பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
2024 செப்டம்பரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டதாகவும் இதற்கு பதில் வழங்கிய சதொச தலைவர் சமித பெரேரா தெரிவித்தார். அதனால் அவர்கள் 5 ஆண்டுகள் அந்த பதவியில் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அதேநேரம் நிவாரண பொதியிலும் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதம நிறைவேற்று அதிகாரியின் அடிப்படை சம்பளம் ரூபா 173,000. அந்த சம்பளத்திற்கு இந்த வேலையை யாரும் பெற முடியாது எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் சதொச நிறுவனத்தின் அடிப்படை பதவிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவது சிறந்த பலனை அளிக்காது என கோப் குழு தெரிவித்துள்ளது.

Post a Comment