போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இந்நிலையில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து சார்பில் அணி தலைவி நட் சிவர்-ப்ரண்ட் அதிகபட்சமாக 117 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அவருக்குத் துணையாக டாம்மி பியூமண்ட் 32 ஓட்டங்களும், ஹீதர் நைட் 29 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.
இனோகா ரணவீர சிறப்பாகப் பந்துவீசி 10 ஓவர்களில் 33 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுகந்திகா குமாரி மற்றும் உதேஷிகா பிரபோதனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
254 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 45.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

Post a Comment