அதே நேரத்தில் இலங்கையின் விரிவான பொருளாதார சீர்திருத்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக கொசெக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் விரிவான சீர்திருத்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பணவீக்கம் குறைவாக உள்ள நிலையில், அரசாங்க வருவாய் வசூலிப்பு மேம்பட்டு வருகிறது.
சர்வதேச இருப்புகளும் அதிகரித்து வருகின்றன. 2024 இற்குப் பிறகு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக அதிகரித்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
வரவு-செலவுத் திட்டத்தின் வருவாய்-மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் 2022 இல் 8.2%இலிருந்து 13.5% ஆக மேம்பட்டுள்ள நிலையில், இது ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். மேலும் கடன் மறுசீரமைப்பு செயல்முறை அநேகமாகப் பூரணமாகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக திட்டத்தின் செயல்திறன் மிகவும் வலுவாக உள்ளதாகக் கூற முடியும். விரிவான நிதித் திட்டத்தின் நோக்கங்களுக்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் கூற முடியும்.
விரிவான நிதி வசதியின் ஐந்தாவது மதிப்பாய்வை நடத்த எங்கள் குழு தற்போது இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகிறது. அதன்படி, ஐந்தாவது மதிப்பாய்வின் காலப்பகுதி குறித்து எதிர்காலத்தில் எமது குழு அறிவிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
Post a Comment