வட மாகாணத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் 'மறுமலர்ச்சிக்கான பாதை' வேலைத்திட்டத்தின் கீழ் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கான மறுசீரமைப்பு வீதிக்கட்டுமானத்தின் ஆரம்ப நிகழ்வு குறிகாட்டுவானில் நேற்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதன்போது ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,
அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தத்துறையின் அமைச்சராக இருக்கும்போது வடக்குக்கு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ளலாம். அமைச்சர் பிமல் ரத்நாயக்க எந்தத் திட்டம் வரும்போதும் அதில் வடக்கு மாகாணத்தையே முதன்மைப்படுத்துவார் என்று அவர் கூறுவார். அது உண்மை.நான் யாழ்ப்பாண மாவட்டச் செயலராக இருந்தபோது குறிகாட்டுவான் வீதிப் புனரமைப்பு மற்றும் இறங்குதுறை புனரமைப்புக்கு கடுமையாக முயற்சித்தேன். ஆனால் அது கைகூடவில்லை. இப்போதுதான் சாத்தியமாகியிருக்கின்றது. இது மிகச் சிறப்பான தருணம். இந்த அரசாங்கம் சொல்லில் அல்ல செயலில் நிரூபித்து வருகின்றது. வடக்கு மாகாணத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன என்றார்.
மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் முதல் தடவையாக எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தமும் இந்நிகழ்வில் கைச்சாத்திடப்பட்டது.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இ.சந்திரசேகர் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், யாழ் மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வடக்கு மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர்கள், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


Post a Comment