வீடொன்றை நிர்மாணிப்பதற்கு நிதி வசதி இல்லாத 4,000 ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ், நிறைவு செய்யப்பட்ட 1,000 வீடுகள் ஜனாதிபதியால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் UN Habitat இலங்கை அலுவலகத்தின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கம் மற்றும் Coalition for Disaster Resilient Infrastructure (CDRI) உதவியுடன் செயற்படுத்தப்படும் அம்பத்தலே நீர் வழங்கல் திட்டமும் அடையாள ரீதியாக கையளிக்கப்பட்டது.
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான நிதி உதவி வழங்குதல் உள்ளிட்ட மக்களின் வீட்டுக் கனவை நிறைவேற்றும் வகையில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் பல திட்டங்களுடன், இந்த ஆண்டு உலக குடியிருப்பு தினத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் கொண்டாடப்பட்டது.


Post a Comment