Ads (728x90)

எதிர்கால சந்ததியினரின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும், தேசிய பேரழிவாகவும் மாறியுள்ள போதைப்பொருள் வர்த்தகத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டிய தேசியத் தேவையை ஜனாதிபதி ஊடக நிறுவனத் தலைவர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். 

இலங்கையிலிருந்து போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு’குறித்து ஊடக நிறுவனத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார். 

இந்த விடயத்தில் எவ்வித விவாதத்திற்கும் இடமில்லை எனவும், இந்த தேசியப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 

இதுகுறித்து சமூகத்தில் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், இதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதோடு, அனைத்து ஊடக நிறுவனத் தலைவர்களையும் இந்த முயற்சிக்கு பங்களிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget