Ads (728x90)

2026 ஆம் ஆண்டளவில் இலங்கையின் பொருளாதாரம் 3.1% என்ற அதன் இயல்பான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் துணை பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லிங் அறிக்கையொன்றில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு இலங்கை சந்தித்த கடுமையான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து மிக வேகமாக இலங்கை மீண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நீடிக்கப்பட்ட நிதி வசதி மற்றும் நாட்டின் சில மறுசீரமைப்புக்கள் காரணமாக, கடந்த ஆண்டு பொருளாதாரம் 5% வரையிலும், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 4.8% வரையிலும் வேகமாக வளர்ச்சி அடைந்தது. இது ஒரு நல்ல மீட்சியாக பார்க்கப்படுகிறது.

எனினும் தற்போது அந்த வேகமான மீட்சி முடிவடைந்து, நாட்டின் பொருளாதாரம் இனி ஆண்டுக்குச் சராசரியாக 3.1% என்ற அளவில் சாதாரண வேகத்தில் வளர்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget