இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றது.
போப் லிச்பீல்ட் 119 ஓட்டங்களையும், எலிஸ் பெரி 77 ஓட்டங்களையும், ஏஷ்லி கார்ட்னர் 63 ஓட்டங்களையும், பெத் மூனி 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.3 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் ஜெமிமா ரொட்றிகஸ் ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்களையும், அஹாமன்ப்ரீத் 89 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதேநேரம் நேற்று இடம்பெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Post a Comment