இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இங்கு 2025 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றின் நடைமுறைப்படுத்தலில் உள்ள சிக்கல்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிதியாண்டிற்கான அபிவிருத்தி நிதியை திறைசேரிக்கு மீண்டும் கையளிக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
ஹம்பாந்தோட்டை சார்க் கலாசார நிலையம் மற்றும் அநுராதபுரம் கேட்போர் கூடம் போன்ற பல கட்டடங்கள் பராமரிப்பின்றி உள்ளதையும், அவற்றை பராமரிக்க எந்தவொரு நிறுவனமும் முன்வராத நிலையையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இத்தகைய நிறுவனங்களை தனியார் துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது பொருத்தமான அணுகுமுறை எனவும் அவர் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்காக இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது.
மாவட்டத்தில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோக சம்பவங்களைத் தடுப்பது மற்றும் சுரங்கக் கைத்தொழிலுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Post a Comment