Ads (728x90)

யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. 

இந்த பொலிஸ் நிலையம் மக்களுக்கு சொந்தமான எட்டு வீடுகளில் இயங்கி வந்த நிலையில், அந்த வீடுகளில் ஏழு வீடுகளை மீண்டும் அந்த நபர்களுக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதற்கமைய இன்று அந்த வீடுகள் நீதிமன்ற அதிகாரியால் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தற்காலிகமாக அந்தப் பகுதியின் முறைப்பாடுகளை யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் ஆயுதக் கிடங்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இன்னும் இரண்டு மாதங்களில் கோப்பாய் பொலிஸ் நிலையம் மீண்டும் புதிய இடத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget