லசந்த விக்ரமசேகர மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, கெக்கிராவ பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரில் துப்பாக்கிதாரியின் மனைவி, துப்பாக்கிதாரியை அழைத்துச் சென்ற உந்துருளியை செலுத்திய நபர் மற்றும் பதுங்குவதற்கு உதவிய நபர் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு, காவல்துறை விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோரின் கூட்டு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதான சந்தேக நபரான துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். கைது நடவடிக்கையின்போது சந்தேக நபர்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டதில் ஒரு காவல்துறை அதிகாரி காயமடைந்துள்ளார்.
இத்துடன் குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட உந்துருளி, ரூபா 12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாகவும் இருந்ததாக கூறப்படும் மற்றொரு சந்தேகநபர் காலியில் வைத்து வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment