Ads (728x90)

விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா என்ற புதிய தகவல் களஞ்சியத்தை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.

இந்த குரோக்பீடியாவில் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தால் உறுதிப்படுத்தப்பட்ட பதிவுகள் மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிபீடியாவை பொறுத்தவரை தகவல்களை யார் வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்யலாம்.

இதனால் இந்த தரவுகள் சில நேரங்களில் பக்கச் சார்புள்ள பதிவுகளாக இருப்பதாக கூறியிருக்கும் எலான் மஸ்க், பக்கச் சார்பில்லாத தரவுகளை பெற குரோக்பீடியாவை நிறுவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது அறிமுகம் ஆகியிருப்பது 0.1 பதிப்பு தான் என்றும் இதுவே விக்கிபீடியாவை விட சிறப்பானதாக இருக்கும் எனவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget