Ads (728x90)

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. 

நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட வழக்கு ஒன்றில் அவர் விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை உத்தரவை நீதவான் இசுரு நெத்திகுமார இந்த பிறப்பித்துள்ளார். 

நீதிமன்றத்தில் ஜகத் மனுவர்ண சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், காணிப் பகிர்ந்தளிப்புக்கான தேசிய நிகழ்வொன்றில் தமது சேவை பெறுநர் கலந்துகொண்டமையால் இன்று நீதிமன்றில் அவரால் ஆஜராக முடியவில்லை என்று சுட்டிக்காட்டினர். 

விடயங்களைக் கருத்திற்கொண்ட கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார, சந்தேக நபருக்குப் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget