Ads (728x90)

நான்கு புதிய மேல் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட கொழும்பில் உள்ள நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் மேற்படி மேல் நீதிமன்றங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இந்த இல்லங்கள் விரைவில் மேல் நீதிமன்றக் கட்டடங்களாக மாற்றப்படவுள்ளன. இந்த நடவடிக்கையானது நீதிமன்றங்களுக்கான இடவசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் (2025-2029) இன் பிரகாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய மேல்நீதிமன்றங்கள் சிலவற்றை துரிதப்படுத்தி தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, 04 மேல் நீதிமன்றங்களைத் தாபிப்பதற்காக தற்போது பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழுள்ள கீழ்வரும் முகவரிகளில் அமைந்துள்ள கட்டடங்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைப்பதற்காக தமது அமைச்சின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. அதன்படி கொழும்பு -07 கிறகெரி வீதி, இலக்கம் B 88 இல் உள்ள கட்டடம், கொழும்பு- 07 பௌத்தாலோக்க மாவத்த, இலக்கம் C 76, இல் உள்ள கட்டடம், கொழும்பு- 07 விஜேராம வீதி, இலக்கம் B 108, இல் உள்ள கட்டடம், கொழும்பு 07 ஸ்டென்மோர் சந்திரவங்கய, இலக்கம் B 12. கட்டடம் ஆகிய முகவரிகளில் உள்ள கட்டிடங்களில் புதிய மேல் நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன.   


Post a Comment

Recent News

Recent Posts Widget