Ads (728x90)

அக்மீமன பகுதியில் வாடகைக்கு எடுத்த வீட்டில் குஷ் ரக கஞசா போதைப்பொருளை பயிரிட்ட பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை காலி மாவட்ட குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர். 

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்காக அவர் குறித்த வீட்டின் இரண்டு அறைகளில் அந்த கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக பொலிஸார் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

குறித்த வீடு கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு சொந்தமானது என்றும், சந்தேக நபர் வீட்டை வாடகைக்கு எடுத்து அதற்காக மாத வாடகையாக 1.5 இலட்சம் ரூபாவை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத்தின் அறிவுறுத்தலின் பேரில், காலி மாவட்ட குற்றப்பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா முன்னெடுத்து வருகிறார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget