ஏழு இஸ்ரேலிய பணயக்கைதிகளை கொண்ட முதலாவது குழுவை ஹமாஸ் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ள நிலையில், தொடர்ந்து 13 இஸ்ரேலிய பணயக்கைதிகளை உள்ளடக்கிய இரண்டாவது குழுவையும் மத்திய காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேல் தடுத்துவைத்துள்ள 1,900க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு பதிலாக மொத்தமாக உயிருடன் உள்ள 20 பணயக்கைதிகள் பரிமாறிக்கொள்ளப்படுவார்கள் என்று ஹமாஸ் தெரிவித்திருந்த நிலையில் இன்று இரண்டு குழுக்களாக 20 பணயக்கைதிகளை ஹமாஸ் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.

Post a Comment