Ads (728x90)

கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய மேலதிக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 

பிரதம நீதியரசர் பிரிதி பத்மன் சுரசேனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த புதிய மேலதிக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதன் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றது. பிரதம நீதியரசரால் இதன் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக மேல் நீதிமன்ற நீதிபதி ஹசித சமன் பொன்னம்பெரும மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக ஸ்ரீநாத் குணசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget