Ads (728x90)

ஐக்கிய இராச்சிய தேசிய ஜனநாயகக் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் (வெஸ்ட்மின்ஸ்டர் பவுண்டேஷன்) சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஐக்கிய இராச்சிய தேசிய ஜனநாயகக் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கையர்கள் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

இலங்கையர்கள் இங்கு வந்த அமைச்சர்களிடம் அரசாங்கத்தின் பயணப்பாதை, பொருளாதாரக் கொள்கைகள், தேசியப் பிரச்சினை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் பற்றி பகிரங்கமாக கேள்வி எழுப்பினர்.

அரசியல் மாற்றங்கள், மக்களுக்கு வழங்கப்பட்ட பொருளாதார சலுகைகள் மற்றும் வடக்கு-கிழக்கு கைதிகளின் விசேட பிரச்சினைகளில் அரசாங்கம் எவ்வாறு தலையிட்டுள்ளது என்பதை அமைச்சர்கள் தெளிவுபடுத்தினர்.

நீண்ட கால வளர்ச்சித் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு துறையிலும் ஒரு அழகான வாழ்க்கையை நடைமுறைப்படுத்துவதற்கான முக்கிய அடித்தளம் பற்றி விளக்கப்பட்டது.

இதற்கு முன் ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கத்தின் அமைச்சர்களும் இங்கிலாந்து வெளிப்படையான கூட்டத்திற்கு வந்து பொதுமக்களுடன் உரையாடியதில்லை.

அரசாங்கத்தின் திட்டத்தை பாராட்டிய மக்கள், வர்ணப் பாகுபாடு இன்றி வெளிநாட்டு இலங்கையர்களாக இந்த அரசாங்கத்தை ஆதரிப்பதாக தெரிவித்தனர்.

இலங்கை அறிஞர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் தொழிலதிபர்களையும்  அமைச்சர்கள் சந்திக்கவுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget