Ads (728x90)

மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் 230,980 பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக அகுரஸ்ஸ, கொடபிடிய தேசியப் பாடசாலையில் உரையாற்றும் போதே சிறைச்சாலைகள் ஆணையாளர் இதனைக் கூறினார். 

தென் மாகாணத்திலேயே இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் பாதாள உலக நடவடிக்கைகளிலும் தென் மாகாணம் முதலிடத்தில் இருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க மேலும் தெரிவித்தார். 

தற்போது அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் சிறையில் உள்ளனர். தாயின் தவறான நடவடிக்கைகள் காரணமாக 05 வயதிற்குட்பட்ட 42 குழந்தைகள் உள்ளனர். 05 வயது வரை குழந்தையைத் தாயுடன் தங்க அனுமதிக்கிறோம். அதன் பிறகு தாயையும், சேயையும் பிரிக்கும் நிலைமை மிகவும் சோகமான ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget