Ads (728x90)

இந்தியாவின் ராஞ்சியில் நேற்று முடிவடைந்த 4 வது தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 16 தங்கப் பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 

இலங்கை 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலத்துடன் 40 பதக்கங்களை வென்றது. இந்தியா 20 தங்கப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற்றதுடன், 20 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களையும் வென்றது. 

இலங்கை மற்றும் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் தங்கப் பதக்கத்தை வெல்லவில்லை. குறிப்பாக, 02 வெள்ளிப் பதக்கங்களை வென்ற நேபாளத்தைத் தவிர, வேறு எந்த நாடும் வெள்ளிப் பதக்கத்தையும் வெல்லவில்லை 

பங்களாதேஷ் 3 வெண்கலப் பதக்கங்களையும், மாலைத்தீவு 1 வெண்கலப் பதக்கத்தையும் வென்ற போதும், பூட்டான் ஒரு பதக்கத்தையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 60 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். 

போட்டியை நடத்திய இந்தியா மற்றும் இலங்கையைத் தவிர, பூட்டான், நேபாளம், மாலைத்தீவு மற்றும் பங்களாதேஷை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் ருமேஷ் தரங்கவுக்கு சிறந்த ஆண் தடகள வீரருக்கான விருது வழங்கப்பட்டது. அவர் 84.29 மீட்டர் தூரம் எறிந்து இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தார்


Post a Comment

Recent News

Recent Posts Widget