Ads (728x90)

வெண்டைக்காய் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதய ஆரோக்கியத்தை பேணுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். மூட்டுவலியை குணப்படுத்தும். 

இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் (A, C, K), தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது கண் பார்வை, சருமம் மற்றும் எடை இழப்புக்கும் நன்மை பயக்கும்.

பல்வேறு நன்மைகளை உடையது வெண்டைக்காய். இந்த செடியின் இலைகள், வேர், காய்கள் ஆகியவை மருந்தாகி பயன்தருகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. ஆண் மலட்டு தன்மையை சரிசெய்கிறது. எலும்புகளுக்கு பலம் தருகிறது. புற்றுநோய்களுக்கு காரணமாக விளங்கும் நச்சுக்களை அளிக்கிறது. வெண்டைக்காயை பயன்படுத்தி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும். 

வெண்டைக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து கல்லீரலின் செல்களை பாதுகாக்கின்றன. வெண்டைக்காயை உணவில் சேர்த்து வர கல்லீரல் சார்ந்த நோய்களை தடுக்கலாம்.

உடலில் கொலஸ்ட்ராலின் அளவுகள் அதிகரிக்கும்பொழுது இதய நோய்களின் அபாயமும் கணிசமாக அதிகரிக்கின்றன. நார்ச்சத்து நிறைந்த வெண்டைக்காய் கெட்ட கொலஸ்ட்ராலின் உறிஞ்சுதலை குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் இருதய நோயின் அபாயத்தை குறைக்கவும் வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வெண்டைக்காயில் நிறைந்துள்ள ஃபோலேட் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும். இது கர்ப்பிணிகளின் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கவும், இரும்புச் சத்து பற்றாக்குறை மற்றும் இரத்த சோகையை தடுக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் C தாய் மற்றும் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

உணவாக மட்டுமின்றி மருந்தாக பயன்படும் வெண்டை காய்களை சாப்பிடும்போது உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget