Ads (728x90)

தெற்கு கடற்பரப்பில் நேற்று இலங்கை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தல் நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்ட படகும் பொலிஸ் சிறப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று தெற்கு கடற்பரப்பில் மீட்கப்பட்ட போதைப்பொருட்களில் 670 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 156 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 12 கிலோகிராம் ஹஷிஷ் ஆகியவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget