புதிய விதியின்படி 2007 ஜனவரி 1ம் திகதி அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவா்கள் மாலைத்தீவில் புகையிலை பொருள்களை வாங்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ முடியாது. இத்தடை அனைத்து வகை புகையிலைக்கும் பொருந்தும். விற்பனையாளா்கள் வயதை உறுதிப்படுத்திய பிறகே விற்பனை செய்ய வேண்டும் என இது குறித்து மாலைதீவு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதிக்கும் உலகின் ஒரே நாடாக மாலைதீவு ஆகியுள்ளது.
இத்தடை மாலைதீவுக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும். எலக்ட்ரொனிக் சிகரெட் மற்றும் வேப்பிங் பொருள்களின் இறக்குமதி, விற்பனை, விநியோகம், வைத்திருத்தல் மற்றும் பயன்பாட்டுக்கும் முழு தடை உள்ளது. இது அனைத்து வயதினருக்கும் பொருந்தும்.

Post a Comment