Ads (728x90)

யாழ்ப்பாணம்-பருத்தித்துறை கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா போதைப்பொருள் கடத்துவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 46 பொதிகளில் சுமார் 100 கிலோ கஞ்சா மற்றும் கடத்தல் செயற்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்ட படகு என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா சுமார் 3 கோடி ரூபா பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தடவுலுக்கமைய நேற்று அதிகாலை அப்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ஒரு படகுடன் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட கஞ்சா தொகையும் மேலும் ஒரு படகும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டதுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க அவர்களினால் போதை ஒழிப்புக்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவது போதைப்பொருள் மீட்பு சம்பவமாக இது பதிவாகியுள்ளததாக பருத்தித்துறை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget