போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இலங்கை துடுப்பாட்டத்தில் காமில் மிஷார மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்றார். அவரைவிட குசல் மெண்டிஸ் 14 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 11 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்நிலையில் 115 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
பாபர் அஸாம் ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களையும் சய்ம் அயூப் 36 ஓட்டங்களையும் சாஹிப்ஸதா பர்ஹான் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவிச்சில் பவன் ரத்நாயக்க 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஏஷான் மாலிங்க, வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Post a Comment