Ads (728x90)

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர அனர்த்த நிலைமையில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களுடனான விசேட கலந்துரையாடலில் இன்று முற்பகல் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி கலந்துகொண்டார்.

அனர்த்த நிவாரணங்களுக்காக தற்போது 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 2025 வரவுசெலவுத் திட்டத்தில் மேலும் 30 பில்லியன் ரூபா அவசரத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதால், நிதியை தடையாகக் கொள்ளாமல் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மாவட்ட செயலாளர்களுக்கு தெரிவித்தள்ளார். 

மக்களின் மீட்புப் பணிகள் மற்றும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மேலதிக நிதி தேவைப்பட்டால் கேட்குமாறும், அவசர நிலமைகளில் தற்போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடன் உள்ள நிதியைப் பயன்படுத்துமாறும் அறிவித்துள்ளார்.

எனவே பணத்தை எந்த விதத்திலும் தடையாகக் கருதாமல் மீட்பு மற்றும் நிவாரண சேவைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் மேலும் நிதி தேவைப்பட்டால், அவற்றைக் கோருமாறும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் நிதியை செலவிடுவதில் சுற்றறிக்கைகள் தடையாக இருப்பதைத் தடுக்க உடனடியாக ஒரு புதிய சுற்றறிக்கையை வெளியிடுமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கும் அறிவுறுத்தியுள்ளார். 

மேவும் இடம்பெயர்ந்த மக்களுக்காக பராமரிக்கப்படும் முகாம்களின் நிர்வாகப் பொறுப்பை இராணுவத்திடம் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget