Ads (728x90)

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக தங்களுக்கு துப்பாக்கிகளை வழங்குமாறு 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட இந்தக் கோரிக்கை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பொலிஸ் மாஅதிபரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டது. 

இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க சபாநாயகரும், பொலிஸ் மாஅதிபரும் இணக்கம் தெரிவித்திருந்தனர். 

தற்போதைய அச்சுறுத்தல்கள் குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வு ஒன்றின் பின்னரே தகுதியானவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget