Ads (728x90)

அரச உத்தியோகத்தர்களிடையே செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து செயல்படுத்தும் “AI for Transforming Public Service” எனும் செயலமர்வு வட மாகாண பிரதம செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டின் மூலம் அரச சேவையை நவீனமயப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்பு, பொது மக்கள் சேவைகளை செயற்திறனாக்குதல், புதிய வெளிநாட்டு பயிற்சிகளுக்கான வாய்ப்பு, டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கைகளுக்குத் தயார்படுத்துதல், அரச உத்தியோகத்தர்களிடையே செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை விருத்தி செய்தல், நவீன உலகிற்கு ஏற்ற அதிகாரியை உருவாக்குவது இந்த திட்டத்தின் நோக்கங்களாகும்.

டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய இங்கு முக்கிய உரை நிகழ்த்தியதுடன், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் செயலமர்வில் வளவாளர்களாக பங்கேற்றனர். இந்த செயலமர்வின் இறுதியில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget