Ads (728x90)

2026 ஆம் ஆண்டில் பயணம் செய்யக்கூடிய உலகின் சிறந்த 50 இடங்களில் ஒன்றாக இலங்கையை சர்வதேச அளவில் புகழ்பெற்ற பயண சஞ்சிகையான “டிராவல் + லெய்சர்“ (Travel + Leisure) தெரிவு செய்துள்ளது. 

இதன்படி கலாசாரம், சாகசம் மற்றும் இயற்கையின் அழகு ஆகியவற்றிற்கான "தனித்த பயணத் தலமாக" (stand-alone destination) இலங்கை மாறியுள்ளதாக “டிராவல் + லெய்சர்“ சஞ்சிகையின் ஆலோசகரான ரூமித் மேத்தா (Rumit Mehta) கூறியுள்ளார். 

சாகசப் பயணிகள் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு பிராந்தியத்தை அதிகளவில் ஆராய்ந்து வருகின்றனர். மத்திய மலைநாட்டில் உள்ள ஹோட்டன் சமவெளி மற்றும் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களில் உள்ள மலையேற்றப் பாதைகள் உலகளாவிய கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்து வருகின்றன.

இதில் யாழ்ப்பாணம், ஹோட்டன் சமவெளி மற்றும் அழகிய தேயிலைத் தோட்டங்கள் ஆகியவற்றை அனுபவப்பயணத்திற்கும், நடைப்பயணத்திற்கும் சிறந்த இடங்களாக நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அத்துடன் தெற்குக் கடற்கரைப் பகுதி அதன் கடற்கரைகள், கடல் வாழ் உயிரினங்கள் வெளிப்புற நடவடிக்கைகளுக்காகத் தனித்துக் காட்டப்படுகிறது.

கரையோரப் பயணங்கள், சைக்கிள் ஓட்டும் வழிகள் மற்றும் நடை பாதைகள் ஆகியவை தனித்துவமான அனுபவங்களை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கியமான ஈர்ப்புகளாக மாறியுள்ளன என்றும் பயண சஞ்சிகை குறிப்பிடுகிறது. இலங்கையில் சர்வதேசப் பயண ஆர்வம் நிலையாக அதிகரித்து வருவதாக அது மேலும் தெரிவிக்கிறது.

அத்துடன் விரிவுபடுத்தப்பட்ட பயணத் திட்டங்கள் மற்றும் புதிய வழிகள் மூலம் அடுத்த ஆண்டில் அதிகமான பார்வையாளர்களை முக்கிய கலாசார இடங்கள், அழகிய நிலப்பரப்புகள் மற்றும் தேசியப் பூங்காக்களுக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மலைப்பகுதி வழியாகத் தொடருந்து பயணம் மற்றும் முக்கிய நகரங்களின் கலாசார சுற்றுப்பயணங்கள் ஆகியவை நாட்டின் மிகவும் விரும்பப்படும் விடயங்களில் தொடர்ந்து உள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget