Ads (728x90)

எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மன் உட்பட உலகின் 45 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா இன்றி நாட்டுக்குள் நுழைவதற்கான சலுகையை சீனா நீடித்துள்ளது.

இந்த விசா இல்லா நடைமுறை 2026 டிசம்பர் 31 ஆம் திகதிவரை அது நடைமுறையில் இருக்கும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

32 ஐரோப்பிய நாடுகள் உட்பட 45 நாடுகளுக்குரிய மேற்படி விசா சலுகை காலாவதியான நிலையிலேயே சலுகை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 30 நாட்கள் வரை விசா இன்றி சீனாவில் இருக்கலாம். அதேவேளை கொரோனா பெருந்தொற்றால் வீழ்ச்சிகண்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், தமது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேம்படுத்துவதற்காகவுமே இதற்குரிய நகர்வை சீனா மேற்கொண்டுள்ளது.

அதேவேளை அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இச்சலுகையை சீனா வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget