Ads (728x90)

தேசிய பல்கலைக்கழகங்கள் மூலம் விஞ்ஞானவியல் தாதி பட்டப்படிப்பை நிறைவு செய்த 700 பட்டதாரிகள் தாதியர் வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்புக்கான ஆறு மாத பயிற்சி நெறிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான நியமன கடிதங்களை சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வழங்கி வைத்தார்.

இந்தப் பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பட்டதாரிகள், வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் சேவைத் தேவைகளை கருத்தில் கொண்டு, III ஆம் தர தாதி உத்தயோகத்தர்களாக நியமிக்கப்படுவார்கள்.

இந்த ஆண்டு தாதியர் சேவைக்காக மொத்தம் 4,141 தாதி உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில், மேலும் 2,600 பேரை தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget