Ads (728x90)

இருபதுக்கு 20 முத்தரப்பு தொடரின் ஆறாவது போட்டியில் பாகிஸ்தானை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் கமில் மிஷாரா அதிகபட்சமாக 76 ஓட்டங்களையும், குஷல் மெண்டிஸ் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Abrar Ahmed 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இலங்கை அணி நிர்ணயித்த 185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை மட்டுமே பெற்று இலங்கை அணியிடம் தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தான் அணி சார்பாக சல்மான் அகா ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணியின் துஷ்மந்த சமீர 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget