Ads (728x90)

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும், ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே நிதி முறைகேடு தொடர்பில்  இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் சரித ரத்வத்தே ஒரு சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். 2015 ஆம் ஆண்டில் நிலையான கொள்முதல் நடைமுறைகளை மீறி 50 தற்காலிக கிடங்குகளை வாங்கியது தொடர்பான விசாரணை தொடர்பாக குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த தற்காலிக கிடங்கு இலங்கை அரசு வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மூலம் ரூபா 90 மில்லியனுக்கும் அதிகமான செலவில் வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் சரித ரத்வத்தேவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
 
சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார். சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget